நாளை முதல் விடுமுறை.. பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா? வெளியான முக்கிய தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான அனைத்து தேர்வுகளும் இன்றுடன் முடிவடைய உள்ளதால் நாளை முதல் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை தொடங்கும் கோடை விடுமுறையானது வரும் ஜூன் 4ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த விடுமுறையானது தற்போது ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜூன் நான்காம் தேதி மக்களவை பொதுத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் என்னப்படுவதாலும், தமிழ்நாட்டில் நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாகவும் பள்ளிகளுக்கான விடுமுறை ஜூன் 6-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

எனினும் வெயிலின் தாக்கம் ஜூன் 6-ம் தேதிக்கு பிறகும் அதிகரித்து காணப்பட்டால் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை ஜூன் மாதம் இரண்டாம் வாரம் வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info TNGovt decide Schools reopen on June6


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->