தமிழக அரசு வைத்த கோரிக்கை! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு வைத்த கோரிக்கை! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! 

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்க கோரி தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உச்சநீதிமன்ற விசாரணையில், தள்ளி வைக்க முடியாது என்று மத்திய அரசு பதிலளித்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்திக்கோரிய மனு நிலுவையில் இருப்பதால், கலந்தாய்விற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் வேண்டும் என, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, "முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்க முடியாது" என மத்திய அரசு பதில் அளித்தது. 

இந்நிலையில், இன்று முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நீட்டிக்கக் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDIAN HC REJECT TO TN GOVT REQUEST


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal