சுதந்திர தின விற்பனை.. க்ரோமா ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி!
Independence Day sale Discount on Chromo smartphones
டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் மற்றும் மிகவும் நம்பகமான ஓம்னி சேனல் எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனையாளரான க்ரோமா , இந்த சுதந்திர தினத்தை நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பானதாக மாற்ற உள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட க்ரோமாவின் சுதந்திர தின சிறப்பு விற்பனையில், இதுவரையில் இல்லாத வகையில் பிளாக்பஸ்டர் சலுகைகள் மற்றும் ஏராளமான மின்னணு சாதனங்களுக்கு அதிரடி விலைக் குறைப்பு என பல சலுகைகள் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றனஆகஸ்ட் 17 வரை சுதந்திர தின சிறப்பு சலுகை விற்பனை நடைபெறுகிறது.
இந்தியா முழுவதிலும் உள்ள 560-க்கும் மேற்பட்ட க்ரோமா விற்பனை நிலையங்களில் பம்பர் சலுகைகள், சிறந்த மதிப்பு, மலிவு விலை மற்றும் அட்டகாசமான தள்ளுபடி என வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் கொண்டாட்டத்தை உறுதியளிக்கிறது.
ஸ்மார்ட்போன்கள் முதல் தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரம் உள்ளிட்ட இன்னும் பல தயாரிப்புகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது.
இதனால், இந்த சிறப்பு விற்பனை வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் அதி நவீன தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்த ஒரு அருமையான வாய்ப்பை வழங்குகிறது.
"இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு, க்ரோமா இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது,
இதில் பல்வேறு பிரிவுகளிலான தயாரிப்புகளுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் இந்த சுதந்திர விற்பனையில் க்ரோமா ரூ.12,500 வரை வங்கி கேஷ்பேக் பிரத்தியேக சலுகை, கவர்ச்சிகரமான எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், பூஜ்ஜிய-கட்டண மாதாந்திர தவணைத் திட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கான சிறப்பு சலுகைகள் என ஏராளமான சலுகைகளை வழங்குகிறது. என்று இன்ஃபினிட்டி ரீடெய்ல் லிமிடெட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
English Summary
Independence Day sale Discount on Chromo smartphones