மாணவியிடம் அநாகரிக ஆபாச பேச்சு...! கோவையில் எல்லை மீறிய கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது...! - Seithipunal
Seithipunal


கோவையில் கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து வந்த 13 வயது பள்ளி மாணவி, தனது வீட்டின் அருகே தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.அப்போது அங்கு வந்த ஒருவர், மாணவியிடம் முகம் சுளிக்க வைக்கும் வகையில் அருவருப்பான வார்த்தைகளால் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்பாராத இந்த செயலில் அதிர்ச்சியடைந்த மாணவி, கண்கலங்கியபடி வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து பெற்றோர் உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவலர்கள் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் கோவை - திருச்சி சாலையைச் சேர்ந்த 53 வயதுடைய கட்டிட தொழிலாளி ஜான்பீட்டர் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், ஜான்பீட்டரை விரைவாக கைது செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indecent and obscene talk student construction worker who violated limits Coimbatore arrested under POCSO Act


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->