ரூ.2 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்ற, 56 லட்சம் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி; மகாராஷ்டிர அரசு அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


ரூ.2 லட்சம் வரை விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன், முறையாக பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு, ஊக்கத் தொகையாக ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து தனது அரசு ஜூன் மாதத்தில் முடிவெடுக்கும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னதாக கூறியிருந்தார். அதன்படி, தற்போது முதல்வர் தலைமையிலான அமைச்சரவை இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் ரூ.36,585 கோடி மதிப்பிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், பயிர்க் கடன் பெற்றுள்ள 65 லட்சம் விவசாயிகளில், 56 லட்சம் பேர் இந்தக் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பயனடையவார்கள் என்று கூறப்படுகிறது.

அத்துடன், மகாராஷ்டிராவில் தற்போது நடைபெறும் சட்ட மேலவைத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சரவை தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maharashtra Government Waives Farmers Crop Loans Up to Rs 2 Lakh


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->