குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்.! விழுப்புரத்தில் பெரும் சோகம்.. விசாரணையில் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோவில் பகுதிக்கு அருகேயுள்ள குயிலாம்பாளையம் கிராம பகுதியை சார்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் கடந்த சில மாதங்களாகவே கடன் தொல்லையின் காரணமாக அவதியுற்று வந்ததாகவும்., இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரியவருகிறது. 

மனஉளைச்சலில் இருந்து வந்த சுந்தரமூர்த்தி தனது மனைவி மற்றும் மகளுடன் தற்கொலை செய்துகொள்ளவும் முடிவு எடுத்துள்ளார். இந்த நிலையில்., இவர்களின் இல்லத்தில் கடந்த சில நாட்களாகவே ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. 

அருகில் இருக்கும் கோவில் அல்லது ஊருக்கு சுற்றுலா சென்று இருப்பார்கள் என்று எண்ணி அக்கம்பக்கத்தினர் நினைத்திருந்த நிலையில்., இவர்களின் இல்லத்தில் இருந்து மூன்று நாட்கள் கழித்து அழுகிய துர்நாற்றம் வீசியுள்ளது. 

கொலை, தற்கொலை, murder, killed, suicide attempt, vilupuram family attempt suicide died,

இதனையடுத்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற சமயத்தில்., இவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும்., நால்வரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதை போல., ஆங்காங்கே உயிரற்று இருந்துள்ளனர். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., நால்வரின் உடலையே கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து., இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vilupuram family members attempt suicide due to loan problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal