அதிகாரிகளுக்கு ‘ஸ்ட்ரிக்ட்’ உத்தரவு பறக்குமா...? ஜூன் 29,30-ல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் நடத்தும் முதல் உயர்மட்ட அதிகாரிகள் மாநாடு...!
Will strict order be issued officers Chief Minister Vijay hold the first high level officers conferencer IAS IPS and IFS officers June 29th and 30th
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில், வரும் ஜூன் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் உயரதிகாரிகள் மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த மாநாட்டில் அரசின் மக்கள் நலத்திட்டங்கள், நிர்வாக செயல்திறன், சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய சவால்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் இடம்பெறும்.
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக முதலமைச்சர் விஜய் தலைமையில் இந்த உயர்மட்ட மாநாடு நடைபெற உள்ளது.
வரும் ஜூன் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், மாநிலம் முழுவதிலுமுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த இருநாள் மாநாட்டில் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு சூழல், முதலீட்டு வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி மற்றும் நிர்வாக மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்த மாநாடு, புதிய அரசின் நிர்வாக முன்னுரிமைகள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்களை தெளிவுபடுத்தும் முக்கிய அமர்வாக பார்க்கப்படுகிறது.
English Summary
Will strict order be issued officers Chief Minister Vijay hold the first high level officers conferencer IAS IPS and IFS officers June 29th and 30th