சட்டசபையில் வெடித்த தவெக - திமுக நேரடி மோதல்...! "வாய்திறக்காத விஜய்" என சாடிய திமுக... "கொளத்தூர் என்னாச்சு?" என அனல் பறக்க வைத்த ஆதவ் அர்ஜுனா...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று கடும் அமளி மற்றும் பரபரப்புக்கு இடையே நடைபெற்றது.இன்றைய விவாதத்தின் போது நாகர்கோவில் தொகுதி தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பினார்.

அப்போது அவர், “தமிழகத்தில் எத்தகைய சம்பவம் நடந்தாலும், வானமே இடிந்து விழுந்தாலும் முதலமைச்சர் விஜய் மௌனம் காக்கிறார்” என குற்றஞ்சாட்டினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் ஆர்ஜுனா, “முதலமைச்சர் எப்போது பேச வேண்டும், எதைப் பற்றி பேச வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும்.

கொளத்தூரில் 5 நிமிடம் பேசியதே போதுமான பதிலாக அமைந்தது” என்று தெரிவித்தார்.இந்த கருத்து அவையில் புதிய சர்ச்சையை கிளப்பியது.உடனே தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவங்கர் எழுந்து, “தேவையில்லாமல் கொளத்தூர் குறித்து ஏன் பேசப்படுகிறது?” என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.இதற்கு பதிலடியாக த.வெ.க. உறுப்பினர்களும் முழு எண்ணிக்கையிலும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக எதிர்த்து குரல் உயர்த்தியதால் அவை அரங்கமே பதற்றமடைந்தது.

சில நிமிடங்கள் அவையில் கடும் சத்தம், கூச்சல், வாக்குவாதம் நீடித்தது. சூழ்நிலை கைகலப்பை ஒட்டிய அளவிற்கு பதற்றமாக மாறியது.அந்த நேரத்தில் ராயபுரம் தொகுதியைச் சேர்ந்த த.வெ.க. உறுப்பினர் ஒருவர் தனது இருக்கையிலிருந்து முன்னோக்கி நகர்ந்ததால் பரபரப்பு மேலும் அதிகரித்தது.

பின்னர் சபாநாயகர் உடனடியாக தலையிட்டு, இருதரப்பு உறுப்பினர்களையும் அமைதிப்படுத்தினார்.தொடர்ந்து அவையில் அமைதியை நிலைநிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் எழுந்து பேசினார்.

அவர் கூறுகையில், “நீங்கள் பேசினால் நாங்களும் பேசுவோம். நீங்கள் பயன்படுத்தும் மொழியில் பதிலளிக்க எங்களுக்கும் தெரியும். ஆனால் அவை மரபும், அரசியல் நாகரிகமும் கருதி அமைதியை கடைப்பிடித்து வருகிறோம்.எங்களை திட்டமிட்டு தூண்ட முயன்றால், அதற்கான பதிலும் உறுதியாக இருக்கும்.

கவர்னர் உரை மீதான விவாதம் குறித்து பேச வேண்டிய நேரத்தில், அவையுடன் தொடர்பில்லாத மேடைப் பேச்சுகளை கொண்டு வந்து நேரத்தை வீணாக்க வேண்டாம்” என்று கடுமையாக எச்சரித்தார்.இதனைத் தொடர்ந்து அவையில் ஏற்பட்ட பரபரப்பு படிப்படியாக அடங்கியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Direct clash between Tvk and DMK erupted assembly DMK slammed Vijay not opening his mouth Adhav Arjuna sparked firestorm by asking What happened Kolathur


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->