மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பி.டி. மாஸ்டர் மீது ஆசிட் வீச்சு...! பின்னணியில் பழிவாங்கலா...? - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.திருவாரூர் மாவட்டம் பெரும்புகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (48).

இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இவர் இரவு நேர பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் திடீரென வழிமறித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் வாஞ்சிநாதனின் முகத்தை குறிவைத்து ஆசிட் வீசி விட்டு கணநேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இந்த திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த வாஞ்சிநாதன் வலியால் அலறிய நிலையில் சாலையோரத்தில் சரிந்து விழுந்ததாக தெரிகிறது.இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவலர்கள் உடனடியாக விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர்.

அப்போது நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.பள்ளியில் பயிலும் சில மாணவிகளுக்கு வாஞ்சிநாதன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், மாணவிகளை மிரட்டும் நோக்கில் சில காட்சிகளை பதிவு செய்து, அதனை பயன்படுத்தி அச்சுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளுடன் ஆசிட் தாக்குதலுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவலர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? தாக்குதலுக்கான உண்மையான காரணம் என்ன? என்பன குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Acid attack PT master who harassed female students Was it revenge background


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->