மாற்றத்திற்கான ஆட்சி இதுதானா...? சட்டமன்ற நேரலை துண்டிப்பு...! - தவெக அரசை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!
Is this government change Live broadcast Legislative Assembly Nayinar Nagendran who bought tvk government
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளின் நேரலை ஒளிபரப்பில் ஏற்பட்ட திடீர் இடைநீக்கம் ஜனநாயக வெளிப்படைத்தன்மைக்கு எதிரானது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்படுவதாவது,"தமிழக சட்டப்பேரவையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் எந்தவித தடையுமின்றி முழுமையாக நேரலை செய்யப்படும் என்று தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் பரப்புரையின் போது உறுதியளித்திருந்தார்.

ஆனால், தற்போது சட்டமன்றத்தில் கவர்னர் உரை மீதான விவாதத்தின் போது நேரலை ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
‘மாற்றத்திற்கான ஆட்சி’ என முழக்கமிட்டுவிட்டு, முந்தைய ஆட்சியின் செயல்முறைகளைப் போலவே தங்களுக்கு சாதகமான பகுதிகளை மட்டும் ஒளிபரப்பி, எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கருத்துகளையோ அல்லது அரசுக்கு விருப்பமில்லாத விமர்சனங்களையோ மக்களிடம் சேரவிடாமல் தவிர்ப்பது ஏமாற்றமளிக்கும் செயலாகும்.
இத்தகைய அணுகுமுறை வெளிப்படையான நிர்வாகத்திற்கும் ஜனநாயக மரபுகளுக்கும் பொருந்தாதது.சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் மக்கள் நலன் சார்ந்த கேள்விகள், கருத்துக்கள் மற்றும் விவாதங்களை நேரடியாக அறிந்து கொள்ளும் உரிமை தமிழக மக்களுக்கு உண்டு.
அந்த உரிமையை மறைப்பது ஜனநாயகத்தின் குரலை ஒடுக்குவதாகவே பார்க்கப்படும்.எனவே, அரசியல் காரணங்களுக்காக நேரலை ஒளிபரப்பை துண்டிக்கும் அல்லது தணிக்கை செய்யும் போக்கை உடனடியாக கைவிட வேண்டும்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசும், பேரவைத் தலைவரும் சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தையும் எவ்வித தடையுமின்றி, முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் நேரலை செய்ய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Is this government change Live broadcast Legislative Assembly Nayinar Nagendran who bought tvk government