மோகத்தின் ஆசையால் காத்திருந்து சதி செய்த விதி.. வாக்குமூலத்தில் வலியை புரிந்துகொள்ளாத சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் அருகேயுள்ள அயன்பொம்மையாபுரம் பகுதியை சார்ந்தவர் ஜோதிமுத்து. இவர் லாரி ஓட்டுநர் ஆவார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியான உஷாராணிக்கு, சீமான் அல்போன்ஸ் மைக்கில் (வயது 14) என்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறார். இரண்டாவது மனைவியான மகாலட்சுமிக்கு எட்வின் ஜோசப் (வயது 9) என்ற மகன் இருக்கிறார். மகாலட்சுமி, உஷாராணியின் தங்கை ஆவார். 

ஜோதிமுத்துவுடைய தம்பி ரத்தினராஜ் (வயது 37) என்பவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று சிறுவர்கள் இருவரை ஊருக்கு தென்பகுதியில் அமைந்துள்ள கிணற்றுக்கு குளிக்க அழைத்து சென்ற நிலையில், இருவரும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து கிணற்றுக்கு அருகே சென்று உறவினர்கள் பார்க்கையில், சிறுவர்களின் செருப்பு மற்றும் சட்டை இருந்துள்ளது.

இதனையடுத்து விளாத்திகுளம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கிணற்றில் இருந்து இரண்டு சிறுவர்களையும் பிணமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சூழ்நிலையில், ரத்தினராஜ் அயன்பொம்மையபுரம் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்துள்ளார். 

இதன்பின்னர் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், உஷாராணியின் தங்கை எனது இல்லத்திற்கு அடிக்கடி வருகை தருவார். இதனால் அவருக்கும், எனக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மாறியது. இதனையடுத்து அவரை கோயம்புத்தூருக்கு அழைத்து சென்றேன். இதனை தெரிந்துகொண்ட எனது அண்ணன் கோயம்புத்தூருக்கு வந்து எங்களை மீண்டும் அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தடைந்தார். 

பின்னர் எங்களின் காதல் தொடர்பை அறிந்து இருவரையும் கண்டித்த நிலையில், மகாலட்சுமியை இரண்டாவதாக அவரே திருமணம் செய்து கொண்டார். எனக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்த நிலையில், திருமணத்திற்கு பின்னரும் எங்களின் பழக்கம் தொடர்ந்தது. மேலும், வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்தோம். 

பள்ளிக்கு விடுமுறை விட்டதன் காரணமாக குழந்தைகள் வீட்டில் இருந்தார்கள். நானும், மகாலட்சுமியும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனிமையில் இருந்ததை சீமான் பார்த்து எனது அண்ணன் மற்றும் எனது தாயாரிடம் கூறினான். இதனால் அனைவரும் என்னை கண்டித்த நிலையில், மகாலட்சுமி என்னிடம் பேசாமல் இருந்து வந்தார். எனது மனைவியும் என்னை பிரிந்து சென்றுவிட்டார். 

இதனால் ஆத்திரமடைந்த நான் மகாலட்சுமி மற்றும் சீமானை கொலை செய்ய திட்டமிட்டேன். எனது திட்டப்படி நான் நேரத்திற்கு காத்திருந்த நிலையில், சீமான் மற்றும் ஜோசப் கிணற்றுக்கு குளிக்க அழைத்து செல்ல கூறி வற்புறுத்தினர். இதனை உபயோகம் செய்து கொண்டு இருவரையும் கிணற்றுக்கு அழைத்து சென்று, கிணற்றில் தள்ளி கொலை செய்து தப்பி சென்றேன். பின்னர் காவல் துறையினருக்கு பயந்து சரணடைந்துவிட்டேன் என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thoothukudi murder due to affair with love girl


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal