குடும்ப சண்டை.. என்னை பழிவாங்குகிறார்..! காவல் ஆய்வாளர் மாயம்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் துணைக்காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் சுரேஷ். இவர் அங்குள்ள செய்துங்க நல்லூர் காவல் நிலையத்திற்கு ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார். இந்த நேரத்தில், அங்கு காவல் ஆய்வாளரான ரகுராஜன் பணியில் இல்லை என்பதால், அவர் சரிவர பணிக்கு வரவில்லை என்று குற்றம்சாட்டி காவல்நிலைய பொதுகுறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார். 

இதனை கவனித்த ரகுராஜன், குறிப்பேட்டில் அவர் தரப்பு பதிலை எழுதிவைத்துவிட்டு காவல் நிலையத்தில் இருந்து சென்றுவிட்டதாக தெரியவருகிறது. இது தொடர்பான குறிப்பேட்டில், காலை சுமார் 06.50 மணியளவில் பணிக்கு வந்திருந்த தன்னை, 7.15 தொடர்பு கொண்டு இருந்த டி.எஸ்.பி சில வழக்கு தொடர்பான குற்றவாளியை பிடிக்க அறிவுறுத்தி வெளியே அனுப்பினார். 

பின்னர் காவல் நிலையத்தில் தான் இல்லை என்பதை அறிந்து கொண்டு, ஆய்விற்கு வருவது போலவே வருகை தந்து, பணியில் எந்ததொரு தண்டனையும் பெறாத தன் மீது அவதூறு குற்றசாட்டுகளை கூறியுள்ளார். நாங்கள் இருவரும் உறவினர்களாக இருந்து வந்தாலும், எங்களுக்குள் குடும்ப சண்டை இருந்து வருகிறது. 

இதனால் ஏற்பட்ட கோபத்தில் தன்னை திட்டமிட்டு பழிவாங்க அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்து எளிதியுள்ளார். இவரது டார்ச்சரின் காரணமாக மனதளவில் கடுமையாக பாதிக்கப்ட்டுள்ளதாகவும், இதனால் தமக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. நான் சிகிச்சைக்கு செல்கின் என்று கூறி சென்றுள்ளார். காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரகுராஜன் வீட்டிற்கும் செல்லாது, மருத்துவமனைக்கும் செல்லாது மாயமாகியுள்ளார். இவர் எங்கு சென்றுள்ளார்? என்பது தெரியாது குடும்பத்தினரும், காவல் துறையினரும் தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thoothukudi inspector missing due to dsp torture


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal