நாடக காதலால் ஏமார்ந்த சிறுமி ஆசிட்டை குடித்த சோகம்.! மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


நாம் வாழும் உலகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறி வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகளில் நாடக காதல் என்று துவங்கி., பலாத்காரம் வரை மிகப்பெரிய அநீதிகள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில்., புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற துயரமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியை சார்ந்தவர் சின்னப்பன். இவரது மகனின் பெயர் அருண்குமார் (வயது 21). இவன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளையங்கட்டியில் இருக்கும் தனது மாமா சுப்பிரமணி என்பவரின் இல்லத்தில் ஒரு வருடத்திற்கு தங்கியிருந்துள்ளான். 

drama love, fake love,

Tamil online news Today News in Tamil

இந்த சமயத்தில்., மாமாவின் மளிகை கடையிலும் பணியாற்றி வந்துள்ளான். இந்த நேரத்தில்., அருண்குமாருக்கும் - அதே பகுதியில் வசித்து வந்த கல்லூரி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமி தனியார் கல்லூரியில் பி.காம் பயின்று வருகிறார். 

இவர்களின் பழக்கமானது நாளடைவில் அருண்குமாரின் நாடக காதல் வலையால் வீழ்ந்த சிறுமியும் - அருண்குமாரும் காதலித்து வந்தனர். சிறுமிக்கு இன்னும் பல நாடக காதல் கதைகள் சொல்லி., காதலை வளர்த்த நிலையில்., அங்குள்ள பகுதிகளுக்கு அழைத்து சென்று வந்துள்ளான். இவனது காதலை நம்பிய சிறுமி., தம்மை திருமணம் செய்துகொள் என்று கூறியுள்ளார். 

died, harassment, abuse,

இதனை ஏற்க மறுத்த அருண்குமார்., திருமணம் செய்ய முடியாது என்று கூறவே., மனமுடைந்த சிறுமி ஆசிட்டை குடித்துள்ளார். ஆசிட்டை குடித்ததில் மயங்கி வீழ்ந்த சிறுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர்., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவம் இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்து., பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு., நாடக காதல் இளைஞனான அருண்குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirupur girl attempt suicide due to drama love


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal