சேலம் அரசு மருத்துவமனையில் தலையீட்டு சாதனம் மூடல் மூலம் இருதயவியல் துறை மருத்துவர்கள் சாதனை..! - Seithipunal
Seithipunal


சேலத்தில் இயங்கிவரும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏட்ரியல் செப்டல் (ASD) குறைபாடு எனப்படும் இருதய நோயால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகள் உட்பட ஆறு நபர்களுக்கு எக்கோ கார்டியோகிராபி மூலம் இருதய குறைபாட்டின் அளவிற்கு ஏற்ப தலையீட்டு சாதனம் மூடல் மூலம் இருதயவியல் துறை மருத்துவர்கள் வெற்றிகரமாக சரி செய்து சாதனை படைத்துள்ளனர்.

சிறப்பாக செயல்பட்ட இருதயவியல் துறை மருத்துவக் குழுவினருக்கு மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இது போன்ற உயரிய சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனையில் 02 லட்சம் முதல் மூன்று லட்சம் வரை செலவாகும்.

ஆனால், அரசு மருத்துவமனையில் முற்றிலும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும், சேலம் அரசு மருத்துவமனையில் இதுவரை 21 நபர்களுக்கு இதுபோன்ற இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cardiology Department Doctors at Salem Government Hospital Achieve Milestone Through Interventional Device Closure


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->