அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஅர்ஜுனா நாவை அடக்கி பேச வேண்டும்; முன்னாள் அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நாவை அடக்கி பேச வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் எச்சரித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று அந்த தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது கூறியதாவது;

''அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ள ஆதவ் அர்ஜுனா, திமுக மீதும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீதும் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் என்றும், அவர் நாவை அடக்கி பேச வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாங்களும் அமைதியாக இருப்பது இல்லை. திமுகவினரும் வாக்குவாதம் செய்யத் தயார் வேண்டும் சுட்டிக்காட்டியுள்ளதோடு, தவெக ஆட்சிப் பொறுப்பேற்று சில நாட்கள் தான் ஆகியுள்ளது. அதற்குள் தவெக ஆட்சி மீது மக்கள் விமர்சனம் செய்ய தொடங்கி விட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை என்றும், அமமுக எம்எல்ஏவை, சட்டபேரவையில் வைத்து தன் பக்கம் இழுத்து கொண்டது, குதிரை பேரம் தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக செய்தியாளர்களிடம் திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Minister Sivasankar warns Minister Aadav Arjuna to rein in his tongue


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->