சென்னை அணியை சில்லுச்சில்லாக நொறுக்கிய முன்னாள் சிஎஸ் கே வீரர்; 06 விக்கெட்டுகளால் வெற்றிப்பெற்ற லக்னோ..!
Lucknow defeats Chennai by 6 wickets
19 வது ஐபிஎல் போட்டியின் 59 வது போட்டி இன்று லக்னோ எக்கானா மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் புள்ளிப்பட்டியலில் 05-வது இடத்தில் உள்ள சென்னை மற்றும் 10 -வது இடத்தில் உள்ள லக்னோ அணிகள் மோதின.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டகாரகளான கேப்டன் ருதுராஜ் 13 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 20 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
அடுத்து வந்த உறவில் படேல் 06 ரன்களில் ஏமாற்றமளித்தார். அடுத்ததாக கார்த்திக் சர்மா நிதானமாக ஆடி, 42 பந்துகளில் 71 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

மற்றைய வீரர்களான பிறேவிஸ் 25 ரன்களில் ஆட்டமிழக்க, சிவம் தூபே 32, பிரசாந்த் வீர் 13 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி, 05 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது.
லக்னோ அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய முன்னாள் சி.எஸ்.கே வீரர் ஆகாஷ் சிங் 03 விக்கெட்டினை வீழ்த்தினார். மொஹமட் ஷமி ஷாபாஸ் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
188 என்ற வெற்றி இலக்குடன் பின்னர் களமிறங்கிய லக்னோ அணி 16.4 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்து 07 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 90 ரன்களும், ஜாஷ் இங்லிஸ் 36 ரன்களும் எடுத்தனர். பூரன் 32, முகுல் சௌத்ரி 13 என ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சென்னை அணி சார்பில் முகேஷ் சௌத்ரி , ஸ்பென்சர் ஜோன்சன் தலா 02 விக்கெட்டினை வீழ்த்தினர்.
English Summary
Lucknow defeats Chennai by 6 wickets