கேரளாவில் முதலமைச்சராக சதீசன் பதவியேற்பு விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்கிறார்..!
Tamil Nadu Chief Minister Vijay attends the swearing in ceremony of Satheesan as Chief Minister of Kerala
நடந்து முடிந்த கேரளா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி 102 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பிறகு கேரளா முதலமைச்சராக சதீஸனை காங்கிரஸ் தேசிய தலைமை தேர்தெடுத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து வரும் திங்கட்கிழமை கேரள முதலமைச்சராக சதீசன் பதவியேற்கவுள்ளார். இந்நிகழ்வில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் வெக அரசுக்கு காங்கிரஸ் 05 எம்.எல்,ஏக்கள் ஆதரவு தெரிவித்து கூட்டணியில் இடம்பிடித்துள்ளனர். அதன்படி, விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார். இந்நிலையில், கேரள முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Tamil Nadu Chief Minister Vijay attends the swearing in ceremony of Satheesan as Chief Minister of Kerala