திருமணம் முடிந்த ஐந்து நாட்களில் மணப்பெண்ணின் விபரீத முடிவு..! மனைவியின் உடலை கட்டியணைத்து கதறிய கணவன்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பகுதியை சார்ந்தவர் சேதுபதி (வயது 22). இதே பகுதியை சார்ந்த பெண்மணியின் பெயர் சிவசக்தி (வயது 19). இவர்கள் இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

திருமணத்திற்கு பின்னர் புதுமண தம்பதிகள் இருவரும் சேதுபதியின் இல்லத்தில் உள்ள மாடியில் தங்கியிருந்த நிலையில்., கீழ்தளத்தில் சேதுபதியின் பெற்றோர்கள் வசித்து வந்துள்ளனர். இந்த தருணத்தில்., இன்று நீண்ட நேரம் கடந்தும் சிவசக்தி கீழே வராமல் இருந்துள்ளார். 

இதனையடுத்து தனது மருமகளை அழைப்பதற்காக மேல்தளத்திற்கு சென்ற நிலையில்., காற்றாடி மாற்றும் கொக்கியில் சிவசக்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்டு பதறிப்போன சேதுபதியின் தாயார் அலறியுள்ளார். 

died, murder, killed, suicide attempt,

இவரின் அலறலை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பதறியபடி வந்து., வீட்டின் கதவை உடைத்து சிவசக்தியை மீட்டுள்ளனர். பின்னர் அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

மருத்துவமனையில் சிவசக்தியை பரிசோதனை செய்த மருத்துவர்கள்., ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்ததை அடுத்து குடும்பத்தினர் கதறியழுதனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in theni new married girl attempt suicide police investigation going on


கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..Advertisement

கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..
Seithipunal