'ஜனநாயகன்' பட விவகாரத்தில் அதிரடி...! - 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம்...! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தற்போது தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக்குழுவின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 3-ந்தேதி அந்த திரைப்படம் சட்டவிரோதமாக இணையவழியில் கசிந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக படத்தை தயாரித்த கே.வி.என். புரொடக்சன்ஸ் நிறுவனம் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் காவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த இணைய கசிவு சம்பவத்தின் முக்கிய தொடர்பாளர்களாக கருதப்படும் உதவி எடிட்டர் பிரசாந்த், செல்வம் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய மூவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சைபர் கிரைம் காவலர்கள் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Action Jananayagan film case Gundas Act falls 3 people


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->