அம்பலமான கடத்தல் பிளான்...! கேரளாவுக்கு 'ரேஷன் அரிசி' கடத்திய லாரி நெல்லையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்து...!
Exposed smuggling plan lorry carrying ration rice Kerala overturns paddy field and causes accident
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கேரளாவுக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட முயன்றதாக சந்தேகிக்கப்படும் 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திசையன்விளை அருகிலுள்ள கோட்டைக்கருங்குளம் பிரதான சாலையில் நேற்று காலை கேரள பதிவு எண் கொண்ட சரக்கு லாரி ஒன்று மன்னார்புரம் வழியாக வேகமாக பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, சாலையோர மின்கம்பத்தில் பலத்த சத்தத்துடன் மோதி கவிழ்ந்தது.இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், சம்பவ இடத்திலிருந்து திடீரென தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் அறிந்த திசையன்விளை காவல்நிலைய ஆய்வாளர் எழில் சுரேஷ்சிங் தலைமையிலான காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது லாரிக்குள் சுமார் 100 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் ரேஷன் அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரள மாநிலத்துக்கு கடத்தப்பட இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சிவில் சப்ளை காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் லாரி மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.
மேலும் தப்பியோடிய லாரி ஓட்டுநரை காவலர்கள் தீவிரமாக தேடி வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சிவில் சப்ளை சி.ஐ.டி. ஆய்வாளர் முருகன் தலைமையில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Exposed smuggling plan lorry carrying ration rice Kerala overturns paddy field and causes accident