கதிர்காமம் தொகுதியில் நீர் மோர் பந்தல்.. எதிர்க்கட்சித் தலைவர் திறந்துவைத்தார்!
In the Kadirgamam constituency the water pudding tent was inaugurated by the opposition party leader
புதுச்சேரி கதிர்காமம் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த நீர்மோர் பந்தலை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் பழவகைகளை வழங்கினார்.
கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு புதுச்சேரி கதிர்காமம் தொகுதியில், இளைஞரணி நிர்வாகி இசைமணி ஏற்பாட்டில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி இன்று காலை வழுதாவூர் சாலையில் நடைபெற்றது.
தொகுதி செயலாளர் வடிவேல் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா கலந்து கொண்டு, நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, நுங்கு, கரும்புச்சாறு, வெள்ளரிப்பழம் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், தொகுதி செயலாளர் சக்திவேல், கதிர்காமம் தொகுதி அவைத்தலைவர் கண்ணபிரான், முன்னாள் கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், மகளிர் அணி சுகுணா, இளைஞர் அணி கதிரவன், உமாமகேஸ்வரன், சரவணன், குமார், ராஜா, இப்ராஹிம், சிவா, குமார், மார்க், நசீர், பெருமாள், ரமேஷ், அன்பு, கலியபெருமாள், சத்தியகுமார். சீனு, ராஜா உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
English Summary
In the Kadirgamam constituency the water pudding tent was inaugurated by the opposition party leader