சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிர்விப்பு அலகு..பூ வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தோட்டக்கலை துறை! - Seithipunal
Seithipunal


பூ " விவசாயிகள்,  வியாபாரிகள் அதிக லாபம் பெற சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிர்விப்பு அலகு நிறுவுவதற்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாரத்தில் சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிர்விப்பு அலகு நிறுவுவதற்கான விழிப்புணர்வு முகாம்தோவாளை மலர்ச்சந்தையில் வைத்து நடைபெற்றது. 

சூரிய சக்தியில் இயங்கும் குளிர்விப்பான் மூலமாக மின்சார செலவை தவிர்ப்பதுடன் பூக்கள்வரத்து அதிகமாகும் காலங்களில் மற்றும் பூக்கள் விலை குறையும் பொழுது குளிர்விப்பான் மூலமாக பூக்களை சேமித்து வைத்து விலை அதிகரிக்கும் பொழுது விற்பனை செய்வதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிக லாபம் பெறலாம். மேலும் இதன் மூலம் பூக்களை இரண்டு வாரங்கள் வரை சேமிக்கலாம் என்ற பல உபயோகமான தகவல்கள் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. 

இம் முகாமிற்கு தோட்டக்கலை துணை இயக்குநர்  ஷீலா ஜாண்  தலைமை தாங்கினார். இதில் வேளாண் சந்தைப்படுத்துதல் செயலாளர் விஷ்ணப்பன்  வேளாண்மை துணை இயக்குநர்(வணிகம்) கீதா தோவாளை  வட்டாரத்தை சார்ந்த விவசாயிகள், பூ வியாபாரிகள் மற்றும் அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் கலந்துகொண்டனர். இம் முகாமினை தோவாளை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் (பொ)  ம. சந்திரலேகா  ஏற்பாடு செய்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A cooling unit powered by solar energy The horticulture department has raised awareness among flower merchants


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->