மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்: 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!
Government school headmaster who sexually harassed students Court sentences him to 30 years in prison
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் முருகன். வயது 54. அரசு பள்ளி தலைமை ஆசிரியரான இவர், கடந்த 2023-ஆம் ஆண்டு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மாணவிகளுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார்.
இவ்வாறு தலைமை ஆசிரியரின் பாலியல் தொல்லையை தாங்க முடியாத மாணவிகள் ஒரு கட்டத்தில், இதுபற்றி பெற்றோரிடம் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது புகார் அளித்துள்ளனர்.

புகாரை தொடர்ந்து, போலீசார் முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி வேல்முருகன் குறித்த வழக்கை விசாரித்தார். இதன் போது அனைத்து சாட்சியங்களும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. மேலும், பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் முருகனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.02 லட்சத்து 02 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Government school headmaster who sexually harassed students Court sentences him to 30 years in prison