மும்மொழி கொள்கையை அமல்படுத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்: கம்யூ. கட்சி வரவேற்பு..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

'பா.ஜ.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, தேசிய கல்விக் கொள்கைப்படி தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

பொது நல மனுவை இன்று 09.05.2025 ஆம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மாநில அரசு, தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல எனவும் கருத்து தெரிவித்து, பொது நல மனுவை தள்ளுபடி செய்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.'என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Supreme Court dismissed the petition seeking the implementation of the trilingual policy Indian Communist Party welcome


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->