ஹர்திக் பாண்டியாவுடன் பாலிவுட் நடிகை ஈஷா குப்தா காதல்..? - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர 'ஆல் ரவுண்டர்' வீரர் மற்றும் ஐ.பி.எல் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் பாலிவுட்டின் பிரபல நடிகையான ஈஷா குப்தா காதலில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து நடிகை ஈஷா குப்தா அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: 2018-ஆம் ஆண்டு ஒரு விருந்து நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியாவை சந்தித்ததாகவும், பின்னர் அவர்கள் இருவரும் 02 மாதங்களாக பழகிக் வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர்கள் டேட்டிங் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் இருவரும் டேட்டிங் கட்டத்தை அடைவதற்கு முன்பே உறவு முடிந்து விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே அது டேட்டிங் அல்ல என்று குறிப்பிட்ட அவர், போதுமான இணக்கத்தில் இல்லை என்பதை உணர்ந்ததால், அவர் என்னுடையவர் அல்ல,என்பதை நான் உணர்ந்தேன் என்று புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா, செர்பியன் நாட்டை சேர்ந்த நடிகை நடாஷா ஸ்டான் கோவிக்கை கடந்த 2020-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் உள்ள நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பரில் விவாகரத்து பெற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bollywood actress Esha Gupta is in love with Hardik Pandya


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->