நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ள 'அங்கம்மாள்'..! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடைப்பெற்ற நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான விருதை தமிழ் திரைப்படமான 'அங்கம்மாள்' படம் வென்றுள்ளது. இதனை சினிமா ரசிகர்கள் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த  படத்தினை இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார். 

சிறந்த படைப்புக்காக மதிப்புமிக்க இந்த விருது படத்தின் இயக்குனருக்கும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகனின் ' கோடித்துணி' என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம் 'அங்கம்மாள்'.

ஒரு கிராமத்தில் ஜாக்கெட் அணியாத தாயின் வழக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாத கதைக்களத்தை கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அங்கம்மாள் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். அவருடன் இணைந்து வடசென்னை, மெய்யழகன் போன்ற படங்களில் நடத்த இளம் நடிகர் சரண், நாடோடிகள் படத்தில் நடித்த பரணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Angammal wins Best Film award at New York Indian Film Festival


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->