தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் விஜய், அஜித் பட இயக்குனர்..!
Vijay and Ajith film director H Vinoth to turn producer
''நேர்கொண்ட பார்வை'', ''வலிமை'',''துணிவு, ''தீரன் அதிகாரம் ஒன்று'' போன்ற திரைப்படங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் எச். வினோத். இவர் ''சதுரங்க வேட்டை'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது விஜய்யின் ''ஜனநாயகன்'' படத்தை இயக்கி வருகிறார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 09-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் எச்.வினோத் புதிய பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமாரை தொடர்ந்து இவரும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இவருடைய தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தை 'மகளிர் மட்டும்' பட இயக்குனர் பிரம்மா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த படத்திற்கான திரைக்கதையை வினோத் எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது.
English Summary
Vijay and Ajith film director H Vinoth to turn producer