சிறுமியை இரண்டு நாட்களாக சித்ரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்.. புதுக்கோட்டையில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி கீழச்சேரி கிராமத்தை சார்ந்தவர் கண்ணன். இவரது மனைவியின் பெயர் செல்லாயி. இவர்களின் மகளின் பெயர் தனலட்சுமி (வயது 20). இவர் கடந்த 24 ஆம் தேதியன்று இயற்கை உபாதையை கழிக்க வீட்டில் இருந்து சென்ற நிலையில், பின்னர் மாயமாகியுள்ளார். 

இவரை காணாது அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இவரை பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை என்பதால் காவல் நிலையத்தில் புகாரளிக்க முடிவு செய்திருந்தனர். இந்த நேரத்தில், இப்பகுதியை சார்ந்த கட்டிட தொழிலாளியான சுரேஷ் (வயது 40) என்பவர், தனலட்சுமியுடைய சகோதரருக்கு தொடர்பு கொண்டு தனலட்சுமி தனது இல்லத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது, தனலட்சுமி மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். இவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த பின்னர், இவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இது தொடர்பாக அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். 

இதுதொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளவே, இதனை அறிந்த சுரேஷ் தலைமறைவாகியுள்ளான். இவன் காவல் துறையினர் வலைவீசி தேடி வரும் நிலையில், விசாரணையில் சுரேஷிற்கு 2 திருமணம் நடந்துள்ளது. இவனது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பெண்ணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இரண்டாவது மனைவி பிரிந்து சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில், சுரேஷின் இல்லமும், தனலட்சுமியின் இல்லமும் அருகருகே என்பதால் சந்தேகம் வராமல் பார்த்துக்கொண்டு, தனலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்ய திட்டமிட்ட கொடூரன், இரவு நேரத்தில் தனலட்சுமி தனியாக வந்ததை பார்த்துள்ளான். பின்னர் தனலட்சுமியின் வாயை பொத்தி வீட்டிற்கு தூக்கி சென்று, இரண்டு நாட்களாக உணவு கூட வழங்காது கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

பெற்றோர்கள் மகளை எண்ணி வருந்தி திக்கி திகைக்கவே, தனது இல்லத்தில் தனலட்சுமியை மறைத்து வைத்திருந்த கொடூரன் எதுவும் தெரியாதது போல சுற்றி வந்துள்ளான். பின்னர் காவல் நிலையத்தில் புகாரளிக்க செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் பயந்துபோன சுரேஷ் தனலட்சுமியுடைய சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில், தலைமறைவாக உள்ள கொடூரனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Puthukottai girl violence sexual torture and harassment police search culprit


கருத்துக் கணிப்பு

விவசாயிகளின் நண்பன் உண்மையில் யார்?.
கருத்துக் கணிப்பு

விவசாயிகளின் நண்பன் உண்மையில் யார்?.
Seithipunal