சொகுசு பங்களாவை சோதனை செய்ததில் காத்திருந்த அதிர்ச்சி.. மீட்கப்பட்ட இளம்பெண்கள்.. விசாரணையில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நாகர்கோவில் மாவட்டத்தில் அவ்வப்போது விடுதிகளில் விபச்சாரம் நடந்து வருவது தொடர்கதையாகியுள்ளது. காவல் துறையினரும் விபச்சாரத்தை தாக்கும் நோக்கில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

என்னதான் காவல் துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு விபச்சாரத்தை தடுத்து வந்தாலும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. நாகர்கோவிலில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி சாலை சந்திப்பில் பங்களா உள்ளது. 

சொகுசு பங்களாவான இதில் பகல் மற்றும் இரவு வேளைகளில் தொடர்ந்து ஆட்களின் நடமாட்டம் சந்தேகிக்கும் வகையில் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

prostitution,

தகவலை அறிந்ததும் காவல் துறையினர் இரண்டு நாட்களாக கண்காணிப்பு பணியில் ரகசியமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நேரடியில் இப்பகுதியில் இருந்து பங்களாவிற்கு சென்று வந்த வாலிபர்களை நோட்டமிட்டுக்கொண்டு இருந்தனர். 

இதனையடுத்து பங்காளவிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பங்களாவில் இருக்கும் தனித்தனி சொகுசு அறையில் மூன்று பெண்கள் இருந்துள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தள்ளது தெரியவந்துள்ளது. 

விபசாரத்தில் ஈடுபட்ட பெண் புரோக்கர் ஒருவர் மற்றும் பெண்களிடம் உல்லாசமாக இருந்த ஜம்புலிங்கம் மற்றும் பிரபாகரன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும்., 3 இளம்பெண்களை மீட்ட காவல் துறையினர் அங்குள்ள காப்பகத்தில் அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in nagarkovil prostitution gang arrest by police investigation going on


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal