சுர்ஜித்திற்காக பிரார்த்தனை செய்யும் இந்தியா..! ட்விட்டரில் ட்ரெண்ட்..!!  - Seithipunal
Seithipunal


மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் எனும் கிராமத்தை சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளியான பிரிட்டோ ஆரோக்கியதாஸ். இவரது 2 வயது மகன் சுஜித் வின்சென் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த 30 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான். 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள், சுஜித்தை மீட்கும் முயற்சியாக ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். 20 அடி ஆழம் தோண்டப்பட்ட நிலையில் பாறை இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

manaparai, மணப்பாறை,

இதெற்கிடையே, மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உருவாக்கிய பிரத்யேக இயந்திரத்தின் மூலமாக குழந்தையை மீட்கும் முயற்சி நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு இயந்திரத்தின் வழியாக விடப்பட்ட கயிற்றைக் கொண்டு கைகளில் சுருக்கு போட முயற்சி மேற்கொள்ளப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றது. அப்போது, குழந்தையின் ஒரு கையில் மட்டும் சுருக்கு சரியாக மாட்டிய நிலையில், மற்றொரு கையில் சுருக்கு மாட்டும்மோது கயிறு தவறிவிட்டது. 

இதையடுத்து மதுரை, திருச்சி மற்றும் கோவையிலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூன்று மாவட்ட தீயணைப்பு துறையினரும் தாங்கள் கொண்டு வந்த சாதனங்களை வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரமாக நடைபெற்ற மீட்புப் பணியில் பின்னடைவு ஏற்பட்டது.அதிகாலை 2.30 மணிக்கு சென்னை ஐஐடியைச் சேர்ந்த குழுவினர் வந்து பிரத்யேக சாதனங்களை கொண்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

manaparai, manaparai child borewell,

மேலும்., தற்போது சிறுவனின் குரலானது அதிகாலை 5 மணிக்கு மேலாக கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. சிறுவன் தற்போது 70 அடி ஆழத்தில் உள்ள நிலையில்., 12 மணிக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக 12.45 மணியளவில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து மீட்பு பணிகளை துவங்கினர். 

இவர்களுக்கு உதவியாக அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பாகவும் அதிகாரிகள் விரைந்து மீட்பு குழுவினருக்கு உதவி செய்ய விரைந்து., குழந்தை சிக்கியுள்ள பகுதியில் இருக்கும் மண்ணின் தன்மை குறித்து ஆய்வு மற்றும்., பிற தொழில்நுட்ப உதவிகளையும் செய்ய விரைந்துள்ளனர். 

குழந்தை சுர்ஜித்திற்க்காக மக்கள் அனைவரும் வேண்டிக்கொண்டு வரும் நிலையில்., இணையத்தளத்தில் நெட்டிசன்களும் தங்களின் பணியை செய்துள்ளனர். இது குறித்த விஷயத்தை மக்களுக்கு தெரியப்படுத்த #prayforsurjith மற்றும் #savesujit என்ற டேக்குகளில் இந்த துயரத்தை பதிவு செய்துள்ளனர். 

இந்த ஹாஷ் டேக்குகள் இணையத்தளத்தில் வைரலாகியதை தொடர்ந்து., இந்திய அளவில் வைரலானது. இந்த விஷயத்தை அறிந்த மக்கள் சுர்ஜித் மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In manaparai surjith trend twitter to save life


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->