படப்பை இளம்பெண் பாலியல் பலாத்காரம் கொலை வழக்கில், காதலன் மாயம்?.. வலைவீசும் காவல்துறை.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சார்ந்த பெண்மணி (வயது 21), தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை ஆதனஞ்சேரி பெரியார் தெருவில் வசித்து வந்துள்ளார். இங்கு வீடெடுத்துள்ள தோழியுடன் இவரும் தங்கியிருந்து வந்துள்ளார். அங்குள்ள ஒரகடம் ராயல் என்பீல்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்று வந்துள்ளார். இவரது தோழி நேற்று முன்தினம் காலை பணிக்கு சென்றுள்ள நிலையில், மாலை நேரத்தில் சுமார் 4 மணியின் போது வீட்டிற்கு வந்த நேரத்தில், வீட்டின் வாயில் திறந்துள்ளது.

வீட்டிற்கு உள்ளே சென்ற நேரத்தில் தோழி மயக்கமான நிலையில் சலனம் ஏதும் இல்லாது இருந்துள்ளார். பின்னர் 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவசர ஊர்தியில் வந்த மருத்துவ குழுவினர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மணிமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இளம்பெண்ணின் உடலை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், பெண்ணின் உடலில் கன்னம் மற்றும் மார்பு பகுதியில் நகத்தினால் கீறப்பட்டதும் போன்றும், கழுத்து பகுதி சிவந்த நிறத்துடனும், நகக்கீறலும் இருந்துள்ளது. காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பெண்ணின் தோழியிடம் மேற்கொண்ட விசாரணையில், தோழி வீட்டிற்கு வந்த நேரத்தில் ஆடைகள் கிழிந்து அலங்கோலமாக இருந்ததாகவும், இவரின் உடல் மீது போர்வை இருந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

சந்தேகத்திற்கு இடமான வகையில் மூன்று நபர்கள் உலாவியதாகவும், இதனால் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகித்திருந்தனர். இதனையடுத்து அங்குள்ள கண்காணிப்பு காமிராக்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் காதலன் என்று அழைக்கப்படும் மனிஷும் தாம்பரத்தில் இருக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. 

தாம்பரத்தில் இருக்கும் மணீஷை காவல் துறையினர் மற்றும் பெண்ணின் தோழி தொடர்பு கொள்ள முயற்சி செய்கையில், அவனது அலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. மேலும், பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதில் இருந்து மனிஷுடைய அலைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் காவல் துறையினர் மணீஷை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து மணீஷை தேடி தனிப்படை காவல் துறையினர் ஒடிஷாவிற்கு தற்போது சென்றுள்ளனர். பெண்ணின் காதலன் கைது செய்யப்படும் பட்சத்த்தில், பெண் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைவழக்கில் உள்ள மர்மங்கள் வெளிச்சத்திற்கு வரும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in kachipuram girl sexual harassment case police went odisha to arrest lover


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->