காருக்குள் காதல் ஜோடிகள் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த சோகம்.! ஈரோட்டில் பேரதிர்ச்சி..! விசாரணையில் பகீர்.!!
in erode couple died after enjoy police investigation going on
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் தெரு பகுதியை சார்ந்தவர் வெள்ளிப்பட்டறை அதிபர் கோபி. இவரது மகனின் பெயர் சுரேஷ் (வயது 22). இவர் தந்தையுடன் வெள்ளி தொழிலை செய்து வந்த நிலையில்., சுரேஷ் நேற்று திடீரென மாயமாகியுள்ளார். இதனையடுத்து இவரது அலைபேசிக்கு முயற்சி செய்கையில்., அலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனையடுத்து அவரை அங்குள்ள பகுதிகளில் தேடியுள்ளனர்.
அவரை எங்கு தேடியும் காணாததை அடுத்து., நள்ளிரவில் அங்குள்ள கார் நிறுத்தும் இடத்தில் தேடியுள்ளனர். இந்த சமயத்தில்., கார் நிறுத்தும் இடத்திற்கு முன்னிலையில் இவரது இரு சக்கர வாகனமும்., இவரது வாகனத்திற்கு அருகேயே இருக்கும் காரில் இவரது தலைக்கவசமும் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காருக்குள் சென்று பார்த்துள்ளனர்.
.jpg)
இந்த சமயத்தில்., சுரேஷுடன் பெண்ணொருவர் பிணமாக இருப்பதையும்., இவர்களின் ஆடைகள் களையப்பட்டு அரை நிர்வாணமாக இருப்பதையும் கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கதறியளவே., இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
இந்த விசாரணையில்., சுரேஷுடன் பிணமாக இருந்தது சேலம் மாவட்டத்தில் உள்ள குகை மாரியம்மன் பகுதியை சார்ந்த பொறியியல் மூன்றாம் வருடம் பயின்று வந்த மாணவி ஜோதிகா (வயது 20) என்பதும்., வெள்ளிப்பட்டறை தொழிலதிபரான சுரேஷ் என்பதும் தெரியவந்தது. மேலும்., ஜோதிகாவின் தந்தை வெள்ளித்தொழில் மற்றும் துணி வியாபாரமும் செய்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்ததன் அடிப்படையில்., கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக இவர்களுக்கு ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த பெற்றோர்கள் இருவரும் கண்டித்த நிலையில்., இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த விஷயத்தை அறிந்த பெற்றோர்கள் ஜோதிகாவை வீட்டு சிறையில் வைத்துள்ளனர்.
.jpg)
பெற்றோர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு அவ்வப்போது காதலனை சந்தித்த நிலையில்., நம்மை பெற்றோர்கள் பிரித்துவிடுவார்கள் என்று எண்ணி., இருவரும் இறப்பதற்கு முன்னர் உல்லாசமாக இருந்து இறக்க நினைத்த காதல் ஜோடிகள்., காருக்குள் உல்லாசமாக இருந்து சையனைடு தின்று இறந்திருக்கலாம் என்றும் காவல் துரையினர் சந்தேகித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில்., இவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனையின் முடிவில் வெளியாகும் தகவலை பொறுத்தே., இவர்களின் இறப்பு குறித்த தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in erode couple died after enjoy police investigation going on