சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நாடக காதல் காமுகன்.. மருத்துவமனையில் சிறுமி.. கடலூரில் சோகம்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அருகேயுள்ள கோழியூர் அரசமரத்தடி பகுதியை சார்ந்தவன் பாபு. இவரது மகனின் பெயர் சந்தோஷ் குமார் (வயது 22). இதே பகுதியில் 16 வயதுடைய சிறுமி, அங்குள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். 

இந்த நிலையில், சந்தோஷ் இரு சக்கர வாகனம் வைத்து வித்தைக்காட்டி சிறுமிகளை மயக்கி வந்துள்ளான். இவனது வலையில் விழுந்த சிறுமியை ஏமாற்றி, இரு சக்கர வாகனத்தில் ஊர் சுற்றலாம் என்று கூறி பெரம்பலூருக்கு அழைத்து வந்துள்ளான். 

இதன்பின்னர் சிறுமியை பெரம்பலூருக்கு அழைத்து வந்த காமுகன், சிறுமியை அங்குள்ள விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளான். 

இவனது பிடியில் இருந்து தப்பிக்க வழி தெரியாத சிறுமியின் உடலில் காயமாக இருந்த நிலையில், அதிகளவு இரத்தப்போக்கால் சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டிற்கு உடல் வேதனையுடன் சென்ற சிறுமியை கவனித்த பெற்றோர்கள் விசாரிக்கவே, கண்ணீருடன் தனக்கு நடந்ததை கூறியுள்ளார். 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்து, பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சந்தோஷை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Cudallore child sexual abuse by drama love culprit


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal