16 உறவினர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில், அனுதினமும் துடிதுடித்து பரிதாபமாக உயிரை விட்ட சிறுமி.!!  - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள கே.கே.நகர் விஜயகராகவபுரம் பகுதியை சார்ந்த தம்பதிக்கு, 7 வயது மற்றும் 10 வயது கொண்ட இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும், ஒரு வயதுடைய மகனும் உள்ளார். இவர்களின் மூத்த மகள் 4 ஆம் வகுப்பு பயின்று வந்த நிலையில், இரண்டவது மகள் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். கணவனும் - மனைவியும் அங்குள்ள வீட்டருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூப்பர்வைசர் மற்றும் வீட்டுவேலை பார்த்து வந்துள்ளனர். 

இந்நிலையில், நேற்றிரவு நேரத்தில் இரண்டாவது மகள் கழிவறைக்கு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராமல் இருந்ததை அடுத்து, சந்தேகமடைந்து தாய் கழிவறைக்கு சென்று பார்க்கையில் குழந்தை மயங்கி கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாய் தனது மகளை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். 

சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கவே, இது தொடர்பான தகவல் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் தாயாருக்கு சொந்த ஊராக விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம் பிரம்மதேசம் பகுதியை சார்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. 

உறவினரை திருமணம் செய்துகொண்டு இரண்டு மகள்கள் பிறந்த நிலையில், கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னதாக ஏற்பட்ட கணவன் - மனைவி பிரச்சனையால் கணவரை பிரிந்துள்ளார். இதனையடுத்து இரண்டு குழந்தையை தாயாரின் இல்லத்தில் விட்டுவிட்டு பாண்டிசேரியில் உள்ள ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்தேன். இந்த நேரத்தில் உடன் பணியாற்றி வந்த நபருடன் காதல் ஏற்பட்டது. 

அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதை அடுத்து, இவரின் மூலமாக மகன் பிறந்தார். கடந்த வருடத்தில் குழந்தையை பார்க்க ஊருக்கு சென்ற நேரத்தில், கடந்த 2018 ஆம் வருடத்தில் இருந்து உறவினர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்தது குறித்து என் மகள் என்னிடம் கூறி அழுதார்கள். மேலும், இது தொடர்பாக யாரிடமும் கூறக்கூடாது என்று கூறி மிரட்டியும் வந்துள்ளனர். 

உறவினர்களை நம்பியிருந்த நிலையில், எனது மகளின் வாழ்க்கையே சீரழிந்துபோனதை எண்ணி மனமுடைந்து பாண்டிசேரிக்கு எனது மகளை அழைத்து வந்து படிக்க வைத்தேன். மூத்தமகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டு ஆசிரியர் மேற்கொண்ட விசாரணையில் எனது மகள் அனைத்தையும் கூறியுள்ளார். இதனையடுத்து ஆசிரியை குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். 


 
இதனை அறிந்த அதிகாரிகள் என்னிடம் விசாரணை மேற்கொண்டு, குழந்தைகள் இருவரையும் அங்குள்ள பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இந்த விசாரணையில் சுமார் 25 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 16 பேரின் மீது போக்ஸோவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

உறவினர்களால் எனது உயிருக்கும், எனது குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தால் கணவர் மற்றும் குழந்தையோடு சென்னைக்கு வந்த நிலையில், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அடிக்கடி வயிற்று வலி பிரச்சனையால் அவதியுற்று வந்தனர்.என் இளைய மகள் கழிவறைக்கு என்ற நேரத்தில் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். இதேபோல எனது மூத்த மகளும் பாதிக்கப்பட்டதால், அவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய காவல் துறையினர் முடிவு செய்தனர். இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in child sexual abuse by 16 relation case, child died stomach pain


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal