ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையுடன் ஒரே கயிறில் தூக்கில் தொங்கிய பெண்மணி..! விசாரணையில் வெளியான கண்ணீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


வரதட்சணை என்ற கொடூரம் என்று தான் குறையுமோ... இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர் கண்ணபிரான் தெரு பகுதியை சார்ந்தவர் சதீஷ் (வயது 32). இவர் சென்னையில் உள்ள பெரம்பூர் மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் ரம்யா (வயது 22). 

இவர்கள் இருவருக்கும் அஸ்வதி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ள நிலையில்., திருமணத்தின் போது ரம்யாவுக்கு 25 சவரன் நகைகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில்., ரம்யாவின் மாமனார் மற்றும் மாமியார் கூடுதலாக 3 சவரன் நகை கேட்டு வந்த நிலையில்., கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ரம்யா அக்கம் பக்கத்து வீட்டாரிடையே பேசாமல் பித்து பிடித்தார் போல இருந்து வந்துள்ளார். 

dowry, dowry images,

மேலும்., தனது மாமனார் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்பது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறியழுதுள்ளார். இந்த நிலையில்., நேற்று சதீஷ் வழக்கம் போல பணிக்கு சென்றுவிட்ட நிலையில்., மாமனார் - மாமியார் வெளியே சென்றுள்ளனர். 

வீட்டில் தனியாக ரம்யா தனது குழந்தையுடன் இருந்த நிலையில்., மனமுடைந்து குழந்தையுடன் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டிற்கு திரும்பிய மாமனார் - மாமியார் வீட்டின் கதவு பூட்டியிருந்ததை அடுத்து., நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கப்படவில்லை.

suicide attempt, dowry,

இதனால் சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியோடு வீட்டின் கதவை உடைத்த சமயத்தில் ரம்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும்., குழந்தையை தேடிய போது தாயின் மடியில் குழந்தையும் உயிரற்று தொங்கியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ரம்யா மற்றும் குழந்தை அஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., இவர்களுக்கு திருமணம் முடிந்து மூன்று வரும் ஆவதால்., மாவட்ட ஆட்சியர் சார்பாவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in arakonam mother suicide with child due to dowry and died


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
Seithipunal