பா.ம.க., பிரமுகரை கொன்ற குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இம்தாத்துல்லா பகீர் வாக்குமூலம்..! - Seithipunal
Seithipunal


கடந்த 2019-இல் பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம், தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் மர்ம நபர்களால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இவ்வழக்கை என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். குறித்த வழக்கு தொடர்பில் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 35 வயதுடைய இம்தாதுல்லா என்பவரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில், பா.ம.க., பிரமுகர் ராமலிங்கத்தை கொலை செய்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைதான இம்தாத்துல்லா, என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ஐந்து நாள் காவலில் உள்ள இவர், என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:

நாங்கள், 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பில் இருந்தோம் என்றும், இந்த அமைப்பின் சார்பில், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில், ஹிந்துக்களை மத மாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டோம் என்றும் அதிர்ச்சி தகவலை குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு மத மாற்றம் செய்ய, திருபுவனத்தில் மக்களை சந்திக்க சென்ற போது அதனை ராமலிங்கம் தடுத்தாகவும், கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், அவரை கொலை செய்ய, 18 பேர் சேர்ந்து தீர்மானித்தாகவும் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். இந்த கொலைக்கான சதி திட்டம், தேனி மாவட்டம் முத்துதேவன் பட்டியில் செயல்பட்டு வந்த, அறிவகம் என்ற முஸ்லிம் மத பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தீட்டப்பட்டதாகவும், அதன்படி, ராமலிங்கத்தை கொலை செய்த பின் தலைமறைவாவானதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், எங்கள் கூட்டாளிகள் ஐந்து பேர் குறித்து துப்பு கொடுத்தால், தலா 05 லட்சம் ரூபாய் தரப்படும் என, என்.ஐ.ஏ., அறிவித்தது என்று கூறியதோடு, தான் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆம்பூர் பிரியாணி என்ற பெயரில் கடை நடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த கடையில் ரகசிய அறை ஒன்று அமைத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகளால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாஹூல் ஹமீது, நபில் ஹாசன், அப்துல் மஜீத் ஆகியோருக்கு அடைக் கலம் கொடுத்ததாகவும், அவர்களை கொடைக்கானலில் உள்ள பூம்பாறை என்ற இடத்திலும் தங்க வைத்து நிதி உதவி செய்து வந்ததாகவும் அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Imthatullahs confession that he gave shelter to the criminals who killed PMK leader Ramalingam


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->