வெளிநாட்டு நாய்கள் இறக்குமதி செய்ய அனுமதி - உயர் நீதிமன்றம் உத்தரவு.!
Importation of foreign dogs allowed High Court order
வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்ய தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாக்க வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டிற்கு நாய்களை இறக்குமதி செய்ய கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்நிய வர்த்தகத் துறை தலைமை இயக்குனர் தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பாணையை எதிர்த்து இந்திய ஜன்னல் கிளப், மெட்ராஸ் கென்னி கிளப் மற்றும் பாலகிருஷ்ணன்பட் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் அந்த மனுவில் உரிய ஆய்வு நடத்தாமல் வெளிநாடுகளில் இருந்து நாய்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இறக்குமதி செய்யப்படும் நாய்களால் உள்நாட்டு நாய்களுக்கு நோய்கள் பரவும் என மத்திய அரசு கூறுவதில் நியாயம் இல்லை என்றும் வர்த்தக ரீதியில் நாய்கள் இறக்குமதி செய்வது மத்திய அரசு முறைப்படுத்தலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நாய்கள் இனப்பெருக்கம் குறித்து 8 வாரங்களில் விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
Importation of foreign dogs allowed High Court order