அரசுக்கு ரூ.1,724 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்... தமிழக அரசு பதில்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சரக்கு மற்றும் மோட்டார் வாகன வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தால் அரசுக்கு ரூ.1,724 கோடி இழப்பு ஏற்படும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் முருகன் வெங்கடாசலம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் சரக்கு வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து மனுதாக்கல் செய்திருந்தார். 

இது குறித்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இந்த விஷயம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது. தற்போது இன்று மீண்டும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதிகளின் முன்னிலையில் வந்தது. 

இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக பதில் மனுதாக்கல் செய்த தமிழக அரசு, " வாகன வரி செலுத்தும் விஷயத்தில் விலக்கு அளித்தால் ரூ.1,724 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று பதில் கூறியுள்ளது. இது குறித்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If cancel goods transport tax govt loss 1724 crore says by TN Govt


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->