உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! அஷ்வின் புறக்கணிப்பு! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. 

இந்தியாவின் நடக்கும் இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

அக்டோபர் 5ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. 

தொடக்க போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் சென்னையில் விளையாடுகிறது.

இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்குபெறும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தமிழகத்தை சேர்ந்தவரும் சுழற் பந்துவீச்சு ஜாம்பவானான ரவிச்சந்திரன் அஷ்வின் புறக்கணிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிசியர் ஏற்படுத்தியுள்ளது.

ரோஹித் ஷர்மா(C), சுப்மன் கில், விராட் கோலி, 
ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், 
ஹர்திக் பாண்டியா(VC), சூர்யகுமார் யாதவ், 
ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், 
ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC World Cup 2023 Team india ashwin


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->