தமிழகத்தில் கணவரும், மனைவியும் பக்கத்து, பக்கத்து மாவட்ட ஆட்சியா்களாக நியமனம்!
IAS couple in TN Two District Collector
தமிழகத்தில் நேற்று 16 மாவட்ட ஆட்சியா்கள் நியமனத்தில், கணவரும் மனைவியும் பக்கத்து, பக்கத்து மாவட்ட ஆட்சியா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் கள்ளச்சாராய மரண சம்பவங்களைத் தொடா்ந்து பல காவல் அதிகாரிகள் மாற்றப்பட்டனா். அதிலும் குறிப்பாக விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மேலும், 16 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனா்.

அதில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக விஷ்ணு சந்திரனும், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித்தும் புதிய ஆட்சியா்களாக பொறுப்பேற்க உள்ளனா்.
இவா்கள் இருவரும் கணவன் - மனைவி ஆவா். பக்கத்து பக்கத்து மாவட்டங்களான சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்டங்களில் இருவரும் பணியாற்றும் வகையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
English Summary
IAS couple in TN Two District Collector