மனைவி கண்டிப்பு... மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்ட கணவர்... அரியலூரில் அதிர்ச்சி...!
Husband committed suicide by setting himself on fire in Ariyalur
அரியலூர் மாவட்டத்தில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி பகுதியை சேர்ந்தவர் பிரசாத்(35). இவரது மனைவி திலகவதி. இந்நிலையில் பிரசாத்துக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். மேலும் தந்தை தனவேலும் கண்டித்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த பிரசாத் வாழ்க்கையில் வெறுப்புடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து பிரசாத் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும் அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரசாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Husband committed suicide by setting himself on fire in Ariyalur