வேலூரில் சோகம் - செங்கல் சூளையில் மூச்சுத்திணறி தம்பதியினர் சாவு.! - Seithipunal
Seithipunal


வேலூரில் சோகம் - செங்கல் சூளையில் மூச்சுத்திணறி தம்பதியினர் சாவு.!

வேலூர் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தெய்வசிகாமணி-அமுல் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த தம்பதியினர் இருவரும் அதே ஊரை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 15 ஆண்டுகளாக செங்கல் சூளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் செங்கல் சூளையில் நேற்று முன்தினம் இரவு செங்கற்களை வேக வைக்க தீ மூட்டப்பட்டபோது தம்பதியினர் இருவரும் செங்கல் சூளைக்கு பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ள தகர சீட்டின் அடியில் தங்கியுள்ளனர். மேலும் செங்கல் சூளையில் மூட்டப்பட்ட தீ அணையாமல் இருக்க சூளையை சுற்றி தார்ப்பாய் மூலம் மூடப்பட்டிருந்தது. 

அப்போது, திடீரென சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், செங்கல் சூளையில் மூட்டப்பட்ட தீ அணைந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால், தம்பதியினர் இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அலறி கூச்சலிட்டனர். பலத்த மழை பெய்ததால் அவர்களது சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. 

இதையடுத்து நேற்று அதிகாலை 5 மணி அளவில், பக்கத்து சூளையின் உரிமையாளர் சீனிவாசன் அந்த வழியாக சென்றபோது அமுலுவின் முனகல் சத்தம் கேட்டது. உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.  

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். புகையில் மூச்சுத்திணறி கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

husband and wife died for suffocation in vellore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->