அரசு பள்ளி சமையலறை சுவரில் மனிதக் கழிவு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே காவேரிபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த 1950ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது. 

இந்தப் பள்ளியை சுற்றி சுற்றுசுவர் இல்லாததால் விடுமுறை நாட்களில் சமூகவிரோதிகள் மற்றும் குடி மன்னர்கள் இங்கே வந்து மதுபானம் குடித்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தப் பள்ளிக்கு நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் அங்கு வந்த மர்ம நபர்கள் முதலமைச்சரின் காலை உணவு தயாரிக்கும் சமையலறை சுவரில் மனிதக்கழிவை பூசிவிட்டு சென்றுள்ளனர். 

இதையடுத்து நேற்று காலை வழக்கம் போல் சமையலறைக்கு சென்ற ஊழியர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். 

ஆனால் அதிகாரிகள் மாலை 3 மணி வரை பள்ளிக்கு சென்று எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இதைத் தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். 

பள்ளியின் சமையலறை சுவரில் மனிதக்கழிவு பூசிவிட்டுச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற ஒரு கொடூர நிகழ்வால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

human waste in govt school kitchen wall at mettur


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->