சேலம் பட்டாசு ஆலை விபத்து.. அறிக்கை அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு..!!
Human Rights ordered to report salem firecracker factory accident
சேலம் பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கொல்லப்பட்டி பட்டாசு குடோனில் நடந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த நிலையில் கொல்லப்பட்டி நாட்டுவெடி பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்துக்கு காரணமான 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள இரும்பாலை காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நாளேடுகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து 6 வாரங்களுக்குள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Human Rights ordered to report salem firecracker factory accident