வெப்ப அலைகளில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பது எப்படி. விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த மாணவர்கள்! - Seithipunal
Seithipunal


வெப்ப அலைகளில் இருந்து குழந்தைகள் பெரியவர்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பது பற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்க சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் காளையார்கோவில் கிளை சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கீழக்கோட்டையில் வெப்ப அலை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பள்ளித் தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை தாங்கினார்.கணித பட்டதாரி ஆசிரியை மீனாட்சி வரவேற்புரை வழங்கினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி வெப்ப அலைகள் அதிகரிக்க காரணங்கள் பற்றியும் வெப்ப அலைகளில் இருந்து குழந்தைகள் பெரியவர்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பது பற்றியும் எலக்ட்ரோலைட் திரவம் பயன்பாடு குறித்தும் பகல் நேரங்களில் பாதுகாப்பாக இருக்க நாம் செய்ய வேண்டியவை குறித்தும் மாணவர்கள் மற்றும் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றி வெப்ப அலை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அனைவருக்கும் வழங்கினார்.

மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளி மைதானத்தில் நின்று கிராம மக்களுக்கு வெப்ப அலை விழிப்புணர்வு வாசகங்களை முழக்கம் இட்டனர். கிராம சுகாதார செவிலியர் அனிதா மக்களை தேடி மருத்துவம் பவதாரணி தன்சுத்தம் பொதுசுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஆசிரியை வாசுகி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியை கமலம்பாய் கணினி பயிற்றுநர் வித்யா மாணவர்கள் கலந்துகொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How to protect children from heat waves Awareness campaigns for students


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->