விஜய்யை கூட்டணிக்கு இழுக்க ரூ.500 கோடி கொடுக்க முயன்ற திமுக: கொளுத்திப்போட்ட முன்னாள் அமைச்சர்..! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்க்கு ரூ.500 கோடி கொடுத்து இழுக்க திமுக அழைப்பு விடுத்ததாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில்அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபைக்கு வருகிற 2026-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுகவும், மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுகவும் அரசியல் களத்தில் போராடி வருகிறது. அத்துடன் முதல் முறையாக தவெக கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது.

தவெக கட்சி, இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என முயற்சித்து வருகின்ற நிலையில், விசிக, பாமக, தேமுதிக உள்ளிட்ட சில கூட்டணி கட்சிகள் நிலைப்பாடு போன்றவை அரசியல் வெற்றியை தீர்மானிக்க உள்ளன. தவெக கட்சி தனித்து போடியிடும் என சொன்னாலும், மறைமுகமாக கூட்டணிக்கான தூண்டிலை போட்டு வருகிறது.

இந்த நிலையில் விஜயக்கு திமுக ரூ.500 கோடி கொடுத்து கூட்டணிக்கு அழைத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி கருப்பணன் மேடையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது, " 500 கோடி ரூபாய் கொடுக்குறோம் கூட்டணிக்கு வாங்கனு விஜய்யை தி.மு.க கூப்பிட்டாங்க.. அதை மட்டும் விஜய் வாங்கிட்டா அவரோட அரசியலே போயிடும்" என கூறியுள்ளார். அத்துடன், எதிர்வரும் தேர்தலில் 200 தொகுதிகளில் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறந்த கூட்டணி அமைத்தார். அதிமுக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வர உள்ளன என்றும், குறிப்பிட்டுள்ளார்.

திமுக விஜய்யிடம் ரூ.500 வாங்கி கொள்ளும்படிகோரிக்கை வைத்துள்ளது. ஆனால், விஜய் அப்படி செய்தால் அவருக்கு நல்லதல்ல. பணம் வாங்க ஆரம்பித்தால் அரசியல் போய்விடும். பொதுமக்களுக்கு ரூ.1,000, ரூ.2000 கொடுக்கின்றனா். இந்த தொகை ஒரு வாரத்தில் தீர்ந்து விடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தவெகவுடன், அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக அண்மையில் தகவல் பரவிய நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தவெகவின் நிபந்தனைகளை அதிமுக ஏற்காத காரணத்தால் விஜயுடனான கூட்டணிக்கு அதிமுக மறுப்பு தெரித்ததாகவும், பின்னர் பாஜகவுடன் சேர்ந்ததாக கூறப்படுகிறது. அத்துடன், திமுக, தவெக, 02 கட்சிகளும் பாஜகவின் பீ-டீம் என சில கட்சிகள் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former ADMK minister says DMK tried to pay Vijay Rs 500 crore for alliance


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->