புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? - Seithipunal
Seithipunal


ஆன்லைனில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

புதிதாக ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களில் இனி காத்திருக்கத் தேவையில்லை. எளிதாக இணையதளம் வாயிலாக நாம் விண்ணப்பிக்க முடியும். அதற்கான செயல்முறைகள் என்ன? என்பதை பார்க்கலாம்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான அத்தியாவசிய அடிப்படை அடையாள அட்டைகளில் ஒன்றாக ரேஷன் கார்டு இருக்கிறது. இது தேவைப்படும் போது தான் இதன் முக்கியத்துவத்தை சிலர் அறிந்து கொள்கின்றனர். அதுவரை, இதை பெறுவது எப்படி? என்று கூட மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.

தேவைப்படும் நேரத்தில் ரேஷன் கார்டை எப்படி விண்ணப்பிப்பது?
 எந்த அலுவலகத்திற்கு சென்று யாரை பார்க்க வேண்டும்? என்றெல்லாம் அவர்கள் மத்தியில் கேள்விகள் எழும். இந்த குழப்பத்தை போக்க தான், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அரசு செயல்படுத்தி உள்ளது.

எளிமையான முறையில் ஆன்லைன் மூலம் ரேஷன் அட்டையை விண்ணப்பித்து பெற முடியும். புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முன், பழைய ரேஷன் அட்டையில் இருந்து உங்களின் பெயரை நீக்க வேண்டும்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, கீழ்காணும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்...

ஆதார் அட்டை

மின் ரசீது

பான் கார்டு

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

வருமான சான்றிதழ்

வங்கி பாஸ்புக்

சாதி சான்றிதழ்

ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் குடும்பத் தலைவர் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், முகவரி, எந்த மாவட்டம், எந்த மண்டலம் அல்லது வட்டம், எந்த கிராமம், அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண், கிராமம், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்கள் கோரப்பட்டிருக்கும். அவற்றைத் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் உள்ளீடு செய்ய வேண்டும்.

ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க, முதலில்  https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

முகப்பு பக்கத்தில் உள்ள ஸ்மார்ட் கார்டு ஆப்ஷனைக் கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது திரையில் ஒரு படிவம் தோன்றும். அந்த படிவத்தை பயனாளிகள் நிரப்ப வேண்டும்.

அனைத்து தகவல்களையும் நிரப்பிய பின்னர், அதனுடன் நீங்கள் அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

நீங்கள் இணைக்கும் ஆவணத்தின் அளவு 1.0 mb அளவிலும், png, jpeg, gif  pdf ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஃபார்மெட்டிலும் இருத்தல் வேண்டும்.

பின்னர் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், எரிவாயு இணைப்புகள் எத்தனை உள்ளது போன்ற தகவல்களை வழங்க வேண்டும்.

பின்னர் நீங்கள் 'உறுதிபடுத்து" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

கிளிக் செய்த பிறகு உங்களுக்கு ஒரு reference எண் கிடைக்கும், அதை பத்திரமாகக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை தொடர்ந்து, நீங்கள் சமர்பித்த ஆவணங்கள் மற்றும் விவரங்களை துறை சார்ந்த அலுவலர்கள் சரிபார்ப்பார்கள். சரிபார்ப்பு முடிந்ததும், உங்கள் ரேஷன் கார்டு உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும். ரேஷன் கார்டு படிவம் சரிபார்ப்பு பூர்த்தியாகவில்லை என்றால், தேவையான ஆவணங்களை கேட்டறிந்து சமர்பிக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How to apply ration card in online


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->