கிருஷ்ணகிரி : கனமழையால் வீடு இடிந்து விழுந்து 3 வயது சிறுமி பலி.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக இரவு நேரங்களில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதில் நேற்று இரவு பசவனதொட்டி கிராமத்தில் கனமழை பெய்தது.

இதில் அப்பகுதியில் கூலி தொழிலாளியான சுரேஷ் அவரது மனைவி இரண்டு பிள்ளைகள் மற்றும் அவரது பெற்றோர் என 6 பேர் வசித்து வருகின்றனர். ஏற்கனவே இவர்கள் வீடு இடியும் தருவாயில் இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து உடனடியாக பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூன்று வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

House collapse 3 years old girl death in Krishnagiri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->