நெல்லை அருகே கோர விபத்து!...அரசு பேருந்து-மினி லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அரசுபேருந்தும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், இளைஞர்கள்  2  பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அரசுபேருந்தும், மினி லாரியும் சென்றும் கொண்டிருந்துள்ளது. தொடர்ந்து மூன்றடைப்பு என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த நிலையில், அரசுபேருந்தும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்கள் நாங்குநேரி அருகே உள்ள படலையார் குளம் பகுதியை சேர்ந்த சுடலை மகன் மாயாண்டி மகேஷ் மற்றும் முதலைக்குளம் செல்வராஜ் மகன் உசிலவேல் என்பது  தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த கோர விபத்து தொடர்பாக மூன்றடைப்பு போலீசார் உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சாலை விபத்தில் இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Horrible accident near nellai tragedy 2 people died in an accident between a government bus and a mini truck


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->