28 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவு; சக நடிகருடன் ஜாலியாக சுற்றும் பிரபல நடிகையால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


ஹாலிவுட் நடிகை லோரி லாக்லின் தனது கணவரை பிரிந்த நிலையில், சக நடிகருடன் நெருக்கமாக இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல ஹாலிவுட் நடிகை லோரி லாக்லின், கடந்த 2019-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கல்லூரி மாணவர் சேர்க்கை மோசடி வழக்கில் சிக்கி, தனது ஆடை வடிவமைப்பாளர் கணவரான மாசிமோ கியானுல்லியுடன் சிறை தண்டனை பெற்றவர். இந்த சம்பவத்திற்குப் பிறகு இவர்களின் திருமண வாழ்வில் பெரும் மன அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடந்த 1997-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இசபெல்லா ரோஸ், ஒலிவியா ஜேட் என இரு மகள்கள் உள்ளனர்.

அத்துடன், இந்த ஆண்டு தொடக்கத்தில், இருவரும் தங்களது பிரம்மாண்ட மாளிகையை விற்பனைக்கு பட்டியலிட்டது. இதனால்,  இவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 28 வருடங்கள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் தற்போது பிரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை, லோரி லாக்லினின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கூறியுள்ளதாவது: 'லோரியும் அவரது கணவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். தங்களது திருமண வாழ்வில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்துள்ளனர். தற்போது சட்டரீதியான நடவடிக்கைகள் எதுவும் இல்லை'என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, நேற்று நடிகை லோரி சக நடிகரான ஜேம்ஸ் டப்பருடன் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள உணவகம் ஒன்றில் இரவு விருந்தில் பங்கேற்றுள்ளார். அத்துடன், அவர்கள் உணவருந்திய பிறகு இருவரும் ஒருவரையொருவர் கட்டிபிடித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோரியும், ஜேம்ஸ் டப்பரும் ஏற்கனவே சில திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hollywood actress Lori Loughlin has divorced her husband


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->